சுமார் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள கார்த்திக் முதல் முறையாக தன் மகன் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து நடித் துள்ள 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 'மௌன ராகம்' படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்த ரா.சங்கரனின் பெயர்தான் சந்திர மௌலி. இதனையே படத்தின் பெயராக வைத்துள்ளனர். "மிஸ்டர் சந்திரமௌலி' படம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். படத்தில் எனக்கு ஜோடி இல்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. தந்தை, மகனாக நடிக்கும்போது அந்தப் பாத்திரங்கள் வித்தியாச மாக இருந்தால்தான் ரசிகர்களைக் கவரும். அந்த ஈர்ப்பு இப்படத்தில் இருக்கும். என் மகன் கௌதம் இவ்வளவு சீக்கிரம் நடிகர் ஆவார் என எதிர்பார்க்கவில்லை. அவரது அர்ப்பணிப்பு பிரமாதம்," என்று கூறியுள்ளார் கார்த்திக். தமிழ் சினிமாவில் அப்பா- மகன் கூட்டணியில் உருவான படங்கள் பல இருப்பினும் இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்களில் ஒருவரான கார்த் திக், அவரது மகனுடன் முதல் முறையாக சேர்ந்து நடித்துள்ளார்.
அப்பா-மகன் கூட்டணியில் 'மிஸ்டர் சந்திரமௌலி'
1 mins read
-

