கங்கனா: சமைக்கத் தெரிந்தவரையே மணப்பேன்

கங்கனா: சமைக்கத் தெரிந்தவரையே மணப்பேன்

1 mins read
3c1d5a53-304e-48ff-bae6-ece3ab2688cc
-

தனக்கு வெளிநாட்டினரை திரு மணம் செய்துகொள்ளும் ஆசை இல்லை என்றும் சமைக்கத் தெரிந்தவரையே மணந்துகொள் வதற்குப் பிரியப்படுவதாகவும் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். தற்போது 31 வயதாகும் கங்கனா, " என் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. எனக்குக் கணவராக வரப் போகிறவர் எப்படி இருக்கவேண் டும் என்று மனதில் கற்பனை செய்து வைத்துள்ளேன். "எனக்குக் கணவராகப் போகிறவருக்கு நன்றாக சமைக்கத் தெரியவேண்டும். மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கவேண்டும். "நான் வெளிநாட்டினரை மணக்கமாட்டேன். எனக்குத் தேசபக்தி அதிகம். எனவே இந்தியராக, நாட்டுப்பற்றுடன் இருப்பவரையே மணப்பேன். திருமணத்துக்குப் பிறகு தேசப்பற்று இல்லை என்று தெரியவந்தால் அவருடனான உறவையே முறித்துக்கொள் வேன்," என்று அதிரடி யாகக் கூறியுள்ளார் கங்கனா ரணாவத்.