பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக மேகா என்ற வங்காள அழகி நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். இவர் 'அமர் பிரேம்' என்ற வங்காளப் படத்தில் நடித்துள்ளார். கதக் நடனம் கற்றவரான மேகா, பாலா இயக்கும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாகும் மகிழ்ச்சியில் உள்ளார். சென்னையில் அரங்குகள் அமைத்து துருவ்-மேகா சம்பந் தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். நடிப்புப் பயிற்சிகளைப் பெற் றுள்ள துருவ்வை பாலா தேர்ந்த நடிகராக மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலாவே இந்தப் படத்தைத் தயாரித்தும் வருகிறார். 'குக்கூ', 'ஜோக்கர்' படங்களை இயக்கி புகழ்பெற்ற ராஜுமுருகன் வசனம் எழுதி உள்ளார். தெலுங்கில் வசூலில் மகத் தான சாதனை படைத்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படமே தமிழில் 'வர்மா' என்ற பெயரில் தயாரா கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு நேப்பாளத்தில் நடந்தது.
விக்ரம் மகன் துருவ்வின் ஜோடியாகும் வங்காள அழகி மேகா
1 mins read
-

