காசு மேல காசு

காசு மேல காசு

2 mins read
335ca3d0-112e-47f0-a80b-8c2bc1e82d3e
-

அறிமுக இயக்குநர் கே.எஸ். பழனி யின் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காசு மேல காசு'. இது முழுநீள நகைச்சுவைப் படமாம். மயில்சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள் ளார். நேற்று வெளியீடு கண்ட இப்படத் துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தகவல். இதனால் உற்சாகத்தில் உள் ளார் பழனி. இவர் இதற்கு முன்னால் 'மன்னார் வளைகுடா', 'இன்னுமா நம்பள நம்புறாங்க', 'கண்டேன் காதல் கொண்டேன்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். தற்போது இயக்கு நராகக் களம் இறங்கியுள்ளார்.

"இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லா மல் போய்விட்டது. தங்கள் மகன், மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக இருக்கும். பிள்ளைகள் குறித்து ஆயிரம் கனவுகளுடன் வாழ்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால், பல சமயங்களில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. "இந்தப் படத்தில் மயில்சாமி பேராசைக்காரராக வருகிறார். தன் மகனுக்கு மிகப்பெரிய குடும்பத்தில் வரன் தேடுகிறார். அதற்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது தான் கதை.

"இதில் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. கதாநாயகனாக ஷாருக் கும் நாயகியாக காயத்ரியும் நடித்துள் ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, 'லொள்ளு சபா' சாமிநாதன் என்று மேலும் பல நகைச்சுவை நட்சத்திரங்கள் உள்ளனர்.

"கதாநாயகனுக்கு இணையாகப் படம் முழுவதும் வருவார் மயில்சாமி. தனது கதாபாத்திரத்தின் முக்கியத் துவம் உணர்ந்து கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது அனுபவமும் நகைச்சுவையும் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது," என்கிறார் இயக்குநர் பழனி. இப்படத்துக்குப் பாண்டியன் இசையமைக்க, சுரேஷ் தேவன் ஒளிப் பதிவு செய்துள்ளார்.

'காசு மேல காசு' படத்தில் இடம்பெறும் காட்சியில் ஷாருக், காயத்ரி.