நயன்தாராவை மெச்சும் விக்னேஷ் சிவன்

நயன்தாராவை மெச்சும் விக்னேஷ் சிவன்

1 mins read
1ece5d6a-c26c-4bbf-a8cd-7da65043f3cd
-

'கோலமாவு கோகிலா' படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நயன் தாராவை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். "புதிய திறமை மீதான உனது நம்பிக்கை, புதிய கதைகளைத் தேர்வு செய்வது, திரையில் நீ சென்று கொண்டிருக்கும் பாதை ஆகியவை உண்மையில் வெகுவாக ஊக்கமளிக்கிறது. இந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்," என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இவரும் நயன்தாராவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்குத் தெரிந்த சங்கதிதான். இந்நிலையில் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் அவ்வப்போது நயன்தாராவை இவ்வாறு பாராட்டி வருகிறார் விக்னேஷ்.