ஆங்கிலம் இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார் மகிமா நம்பியார். இந்நிலையில் 10ஆம் தேதி முதல் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு தொடங்குகிறதாம். இதனால் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஒரு மாதத்துக்கு எந்தப் படப்பிடிப்பிலும் மகிமாவைப் பார்க்க முடியாது. தேர்வுக்கேற்ப கால்ஷீட் தேதிகளை முன்பே மாற்றிவிட்டாராம். தேர்வு முடிந்ததும், மம்மூட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகிவரும் 'அசுரகுரு' படத்தில் நடித்து வருகிறார் மகிமா நம்பியார். மேலும் இரு தமிழ்ப் படங்களிலும் இவர் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.
தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகி
1 mins read
-

