கௌதமின் ஏக்கங்கள்

2 mins read
bebbf275-80a7-433b-aee6-0df9a19ce041
-

திரையுலகில் அறிமுகமான போது செய்த தவறுகள் தான் தற்போது தனது வெற்றிக் கான படிக்கட்டுகளாக மாறி இருப்பதாகச் சொல்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக். தற்போது தனது கதைத் தேர்வு, நடிப்பு ஆகியவற்றில் நல்ல முதிர்ச்சி காணப்படுவதற்கு தொடக்க கால தவறுகளே காரணம் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார். சினிமாவுக்கு வர வேண்டும், நிறைய படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்றெல்லாம் எந்தத் திட்டமும் போட வில்லையாம். எப்படியோ வாய்ப்பு கிடைத்து திரையுலகில் நீடித்து வருவதாகக் கூறுகிறார் கௌதம் கார்த்திக்.

த்து சரியான நிலைக்கு திரும்பி விட்டேன். "நடந்துவிட்ட தவறுகள், எதிர்கொண்ட சோதனைகளுக்குப் பிறகே கணிசமான தூரத்தைக் கடந்து வந்திருக்கிறேன். அந்த வகையில் ஒரு நடிகனாக எனக்கு பல ஏக்கங்கள் உள்ளன. அர்ப்பணிப்புடன் நடிக்க நான் தயார். இந்த எண்ணத்துக்கு பணம் மட்டுமே காரணம் என நிலைத்தால் அது தவறு," என்கிறார் கௌதம் கார்த்திக். அண்மைக் காலமாக தண்ணீரைப் போன்று தாம் மாறிவிட்டதாகச் சொல்கிறார். அதாவது, எந்தப் பாத்திரத்துக்கு மாற்றினா லும் அந்த வடிவத்துக்கு ஏற்ப மாறும் தண் ணீரைப் போன்று தம்மாலும் மாற முடியும் என்கிறார்.

"அதே சமயம் எனக்கான கதாபாத்திரத்தை தீர்மானிப்பது என் கையில் இல்லை. அது படைப்பாளர்களின் பொறுப்பில் இருக்கும் வேலை. வித்தியாசமான, சவாலான வேடங்க ளில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். "எனக்கான கச்சிதமான வேடங்களுடன் என்னை அணுகுபவர்களுக்கு ஒத்துழைக்க வும் கைகொடுக்கவும் நான் தயார். ஒவ்வொரு படமும் எனக்கு நல்ல பாடங்களை கற்றுத் தருகிறது. எனக்கான அவகாசத்தைக் கொடுத்தால் இன்னும் நம்பிக்கையூட்டும் நாயகனாக மாறுவேன். எனக்கு நம்பிக்கை உள்ளது," என்கிறார் கௌதம் கார்த்திக்.