சென்னை: இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி, சமுத்திரம் உள் ளிட்ட பல படங்களில் மனோஜ் நடித்துள்ளார். சம்பவத்தன்று சென்னை ஸ்டெர்லிங் சாலையில் விலை உயர்ந்த 'பிஎம்டபிள்யூ' சொகுசு காரை அவர் ஓட்டிச் சென்றுள் ளார். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மனோஜ் குமாரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் மது அருந்தி யிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து நுங்கம் பாக்கம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய் தனர். தற்போது காவல் நிலையத் தில் மனோஜ்ஜின் கார் நிறுத்தி வைக்கப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பாரதிராஜா மகன் மீது வழக்கு
1 mins read
-

