ஜோதிகா படத்தில் மீண்டும் சிம்பு

ஜோதிகா படத்தில் மீண்டும் சிம்பு

1 mins read
cbe6ab73-94e2-4fe8-8235-357831a43bc0
-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்புவும் ஜோதிகாவும் திரையில் இணைந்துள்ளனர். தற்போது இருவரும் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜோதிகா நாயகியாக நடிக்கும் 'காற்றின் மொழி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் சிம்பு. அண்மையில் அதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. அப்போது சூர்யா, ஜோதிகா, சிம்பு மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் 'காற்றின் மொழி' படத்தில் ஜோதிகா கணவராக விதார்த் நடிக்கிறார். தனஞ்செயன் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளனர். அதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.