'சாமி ஸ்கொயர்' படத்தின் ஒரு பாடல் வெளியீடு

'சாமி ஸ்கொயர்' படத்தின் ஒரு பாடல் வெளியீடு

1 mins read
66ccafa1-aa3f-4b85-9deb-62c928f6cb6b
-

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'சாமி ஸ்கொயர்' படத்தின் பாடல் ஒன்று நேற்று வெளியாகி உள்ளது. 'அதிரூபனே' என்று துவங்கும் அப்பாடலுக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. சிபுதமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆயுதபூசையையொட்டி வெளியிட உள்ளனராம். 'அதிரூபனே' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக இளையர்களை இப்பாடல் வெகுவாகக் கவரும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.