"நல்ல படங்களை மக்கள் என் றைக்கும் ஒதுக்கியதில்லை. அவர்களுக்கு நல்ல படத்தை ரசிக்கத் தெரியவில்லை என்று சொல்வது நமது முட்டாள்தனம். அவங்க ஒரு படத்தை ரசிக்கிற துக்கும், ரசிக்காததுக்கும் நியாய மான காரணங்கள் இருக்கும்," என்று தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் ராஜ்குமார். இவரது இயக்கத்தில் உருவா கும் புதுப்படம் 'ராஜாவுக்கு செக்'.
தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?
"அந்த வித்தியாசம் படத்திலும் இருக்கு. சேரன் இதில் சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவ ருக்கு போலிஸ் சீருடை கூட இல்லை. அவரிடம் பெரிய அடிப் படையான சக்தி இருக்கும். அதைக் கொண்டு சிக்கல்களைத் தீர்க்கும் நேரம் வரும்போது அந்த சக்தி இருக்காது. அவரால் அந்த சக்தியைப் பயன்படுத்த முடியாத நிலைமை வந்துவிடும். "சதுரங்கத்தைக் கவனித்தால் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும். ராஜாவை மட்டுமே வெட்ட முடியாது. 'செக்' வைத்த ஆளை அடிக்கலாம் அல்லது பின்னால் போகலாம். இதுபோல சேரன் அந்த நிலைமையை சமாளித்தாரா, பின் வாங்கினாரா, வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் கரு," என்கிறார் ராஜ்குமார்.
'ராஜாவுக்கு செக்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் சேரன், சரயு மோகன்.

