'சண்டக்கோழி-2' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. லைகா புரொடெக்ஷன்ஸ் உலகெங்கும் எதிர்வரும் அக்டோபர் 18ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. வழக்கமாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமைதான் புதுப் படங்கள் வெளியாகும். பண் டிகை சமயம் என்றாலோ, பெரிய பொருட்செலவில் தயா ராகும் படங்கள் என்றாலோ ஓரிரு தினங்கள் முன்னதாகவே வெளியாகும். அதன்படி வியாழக்கிழமை அன்று வெளியாகிறது 'சண்டக் கோழி-2'. இதில் விஷாலும் கீர்த்தி சுரேஷும் ஜோடி சேர்ந் துள்ளனர். வரலட்சுமி சரத் குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரீஷ் பெராடி, 'கபாலி' விஸ்வந்த், 'அப்பாணி' சரத், ஷண்முக ராஜன் உள்ளிட்டோரும் முக் கிய கதாபாத்திரங்களில் வரு கின்றனர். 'சண்டக்கோழி' முதல் பாகத்தில் நாயகியாக நடித் துள்ள மீரா ஜாஸ்மின் கௌரவ வேடத்தில் வந்து போவாராம். யுவன் சங்கர் ராஜா இப் படத்துக்கு இசை அமைத்துள் ளார்.
'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு தளத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ்.

