விஜய்க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் சிம்பு

1 mins read
7895caf4-5cfe-4c9d-b7ac-d926884968bb
-

'சர்க்கார்' பட சுவரொட்டியில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றதால் வெடித்த சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸும் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்பு மணியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்தச் சுவரொட்டியை இணை யத் தளங்களில் இருந்து நீக்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் விஜய், 'சர்க்கார்' படக்குழுவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார் சிம்பு. இதுபற்றி அன்புமணியுடன் விவாதிக்கத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.