ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரியா பவானி சங்கர்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரியா பவானி சங்கர்

1 mins read
e8f6e430-9ded-4de6-bac7-eeb216d716b5
-

'மேயாத மான்' படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த பிரியா பவானி சங்கர் அடுத்து 'கரடைக்குட்டி'யில் அசத்தியுள்ளார். தமிழ் ரசிகர்கள் தனக்கு அளித்துள்ள வரவேற்பு, தம்மை நெகிழ வைத்திருப்பதாக அண்மை பேட்டியில் தெரிவித்துள்ளார். 'மேயாத மான்' படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக நடிகர் விஜய் பாராட்டியதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். விஜய் அனுப்பிய குறுந்தகவலை பலமுறை திரும்பத் திரும்பப் படித்துப் பரவசமடைந்தாராம்.

"விஜய் சார் அந்தக் குறுந்தகவலை அனுப்பினார் என்பதை என்னாலேயே தொடக்கத்தில் நம்ப முடியவில்லை. படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்கள் கடந்த °பறகு குறுந்தகவல் அனுப்புவாரா என்று யோசனையாக இருந்தது. "அடுத்து உண்மையாகவே அவரிடம் இருந்துதான் வந்துள்ளதா என்ற சந்தேகமும் எட்டிப்பார்த்தது. "எனினும் இந்தக் குறுந்தகல் குறித்து மேலும் சிலர் கூறிய பிறகே விஜய் மூலமாக வி‌ஷயம் வெளியே போயிருக்கிறது. அவர்தான் குறுந்தகவல் அனுப்பினார் என்பது உறுதியானது. இது எதிர்பாராமல் கிடைத்த இன்ப அதிர்ச்சி," என்றார் பிரியா.