சிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்

சிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்

2 mins read
17beec1f-d165-4bca-b937-ab660d558f7d
-

இதுவரை கோலிவுட்டில் வந்த வெற்றிப் படங்களைக் கிண்டல் செய்யும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ள 'தமிழ்ப்படம் 2' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியான திரையரங்கு அனைத்திலும் சிரிப்புச் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. ஊர், உலகத்தில் உள்ளவர் களை எல்லாம் கிண்டல் செய்து ஏகப்பட்ட சுவரொட்டிகள் வெளி யிட்டிருந்தார்கள். அதனால் இந்தப் படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

பொங்கலுக்கு வெளியான சூர்யாவின் படத்திற்கு எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அந்த அளவிற்கு 'தமிழ் படம் 2'க்கும் ரசிகர்களிடையே வரவேற்பு இருந்ததாம். தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.5 கோடியைத் தாண்டியிருக்கும் என்று கூறப் படுகிறது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் 'தமிழ்ப்படம் 2'இல் நடித்திருக் கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த 'தமிழ்ப்படம்' படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் சிறப்புக் காட்சிகளில் நடித் துள்ளனர்.

ரஜினி தொடங்கி தமிழ்த் திரையின் நாயகர்கள் பலரையும் கிண்டல் செய்து காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த் போன்றவர்கள் இந்தப் படத்தில் ஏன் சிறப்புக் காட்சிகளில் நடித்தார்கள் என்ற ஆதங்கம் முன்னணி நாயகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதாம். நம்மைக் கிண்டல் செய்யும் படத்தை நாமே ஆதரிக்கலாமா என்று வருத்தப்பட்டுள்ளனர். இதற்குச் சம்மந்தப்பட்டவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.