மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கும் படத்திற்கு 'வாய்க்கா தகராறு' என்று பெயர் சூட்டியுள்ளனர். 'வாய்க்கா தகராறு' படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கே வெங்கிடி கூறுகையில், "ஒரு ஆண், சூழ்நிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வோர் ஆண் மகன்கள். இரண்டு பெண்களும் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாக வாழ, ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மோதிக் கொள்ள இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பதுதான் கதை," என்கிறார் இயக்குநர்.
யுவன் மயில்சாமி நடிக்கும் 'வாய்க்கா தகராறு'
1 mins read
-

