அருள்நிதியின் அடுத்த படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ஷ்ரதா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. இது அரசியல் நையாண்டி படமாக உருவாகி வருவதாகத் தகவல். இந்நிலையில் பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி. இப்படத்தில் அவரது நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். 'விக்ரம் வேதா'வுக்குப் பிறகு கன்னடம், இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஷ்ரதா அருள்நிதி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். மேலும் மாதவன் ஜோடியாக 'மாறா' என்ற படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
அருள்நிதிக்கு நாயகியானார் ஷ்ரதா
1 mins read
-

