விவசாயியாக நடிக்கவேண்டும் என்னும் ஆசை சிறு வயது முதலே தமக்கு இருந்து வந்ததாகச் சொல்கிறார் கார்த்தி. அந்த விருப்பம் 'கடைக்குட்டி சிங்கம்' மூலம் பூர்த்தியாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு முழுமையான குடும்பக் கதையில் விவசாயத்தையும் நுழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்போது இது போன்ற படங்களில் நடிக்க தாங்களும் விரும்புவதாக இயக்குநர் பாண்டிராஜிடம் சில பெரிய நாயகர்கள் கூறியதாகக் கேள்விப்படுகிறாராம். தமிழகத்தில் விவசாயிகள் தொழிலைக் கைவிட்டு வெளியேறும் அவல நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை தொடர்ந்து கவனித்து வருகிறாராம் கார்த்தி.
'இது சிறு வயது ஆசை'
1 mins read
-