போலிஸ் அதிகாரிகளுக்கும் பேய்க்கும் இடையே போட்டி

போலிஸ் அதிகாரிகளுக்கும் பேய்க்கும் இடையே போட்டி

1 mins read
2bf18841-b80a-4c65-9737-cca39ae9702d
-

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள புதுப்படம் 'மவுனிகா'. முழுநீள திகில் படமான இதை எஸ்.டி.சம்பத்குமார் இயக்கி உள்ளார். "ஒரு கோடீஸ்வரியின் மகன் தனது தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் ஊழியரின் மகளை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறான். பணக்காரக் குடும்பத்தின் வாரிசு என்பதால் முதலில் தயங்கும் அந்தப் பெண் பிறகு காதலை ஏற்றுக் கொள்கிறாள். "இந்தக் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரும்போது திடீரென அந்த இளம்பெண் இறந்து போகிறார். "இதையடுத்து பிரச்சினை வெடிக்கிறது. இளம்பெண்ணின் மரணத்துக்குக் காரணம் யார்?

அவளது காதலனா அல்லது அந்தக் காதல் பிடிக்காதவர் களா? எனும் கேள்வி எழுகிறது. "யார் கொலையாளி என் பதைக் கண்டுபிடிக்க இரு அதிகாரிகளை அந்த ஊருக்குள் அனுப்புகிறது காவல்துறை. இந் நிலையில் இறந்துபோன பெண் ணும் பேயாக உருவெடுத்து தனது இறப்புக்குக் காரணமா னவர்களை பழிவாங்க ஊருக் குள் வருகிறார்.

'மவுனிகா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.