ஒரு நாயகனின் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் ஒரே சமயத்தில் விளம்பரப் படுத்தப்படுகின்றன. இது பலரை வாய்பிளக்க வைத்துள்ளது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் நடித்துள்ள 'ஜுங்கா' இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மற்ற படங்களான 'சீதக்காதி', 'சூப்பர் டீலக்ஸ்', '96' ஆகியவற்றின் விளம்பர வேலைகளும் தொடங்கியுள்ளன. இது போதாதென்று 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா கணவராக கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் சேதுபதி. இப்படமும் விரைவில் வெளியீடு காண உள்ளது.
ஆச்சரியப்படுத்தும் 'ஜுங்கா' பட விளம்பரங்கள்
1 mins read
-

