அஞ்சலி படத்தில் இணைந்த யோகிபாபு

1 mins read
f9c02489-5785-4ebf-94df-db94b6b4c110
-

இப்போதெல்லாம் ஒரு படத்தின் கதாநாயகியுடன் இணைந்து நடிப்பதாகவே யோகிபாபு குறித்து செய்திகள் வெளியாகின்றன. 'கோலமாவு கோகிலா'வில் நயனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. வெளியீடு காண்பதற்கு முன்பே அப்படம் குறித்து ரசிகர்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். இதைக் கவனித்த மற்ற இயக்குநர்களும் தங்கள் படத்தின் நாயகியின் பெயரைக் குறிப்பிட்டு யோகிபாபுவும் அவருடன் இணைந்து நடிப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜ் விஸ்வநாத் நடிக்கும் 'லிசா' படத்தில் அஞ்சலியும் யோகிபாபுவும் ஒப்பந்தமாகி உள்ளனர்.