அதிகம் ஆசைப்படாத கீர்த்தி சுரேஷ்

அதிகம் ஆசைப்படாத கீர்த்தி சுரேஷ்

1 mins read
825deeca-dc04-4dfb-804b-d666f16fd3ef
-

கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை யெல்லாம் தனக்கு அறவே கிடையாது என்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். ஒரு வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் உடனே சம்பளத்தை உயர்த்தும் வழக்கமும் தனக்கு இல்லை என்கிறார். பணம், புகழைச் சம்பாதிப்பதை விட நல்ல நடிகை என்று பெயரெடுப்பதுதான் இவருக்கு முக்கியமாம். "மதிப்பு இருக்கும்போதே நடிகைகள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் நான் அப்படிப்பட்ட ரகம் அல்ல. "எனக்குப் பணம் முக்கியமில்லை. எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்குச் செல்ல வேண்டும், கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை," என்கிறார் கீர்த்தி.