தணிக்கைச் சான்றிதழ் பெற போராடிய 'டார்ச் லைட்' பட இயக்குநர்

தணிக்கைச் சான்றிதழ் பெற போராடிய 'டார்ச் லைட்' பட இயக்குநர்

1 mins read
33eabc49-7fbc-4963-85af-e7a2bd56e2a1
-

சதா, ரித்விகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'டார்ச் லைட்' படத்திற்கு மிகவும் போராடி தணிக்கைச் சான்றிதழ் பெற்றதாக இயக் குநர் மஜீத் தெரிவித்துள்ளார். "கடந்த 1990களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் உதவியுடன் பாலியல் தொழில் செய்யும் பெண்களைப் பற்றிய கதை. இதில் நடிக்க நடிகைகள் பலரும் தயங்கினார்கள். ஆனால் நடிகை சதா தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்லி இருக்கிறோம்," என்கிறார் மஜீத். சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேவி இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.