கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவிற்குத் தமிழ்த் திரையுலகில் தற்போது ஒற்றுமை நிலவி வருவதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒற்றுமை இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார். "திரையுலகில் வியாபாரம் தொடர்பாக பல பிரச்சினைகள் நிலவக்கூடும். ஆனால் ஒற்றுமையாக இருந்தால்தான் அவற்றைச் சீர்செய்ய முடியும். "சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பொறுப்பேற்றதும் அனைத்துத் தளங்களிலும் ஒற்றுமை நிலவுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமையை இப்போது காண முடிகிறது. இந்நிலை நீடிக்க வேண்டும்," என்றார் பார்த்திபன்.
ஒற்றுமை தேவை: பார்த்திபன் வலியுறுத்து
1 mins read
-

