சென்னையில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளித்திருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்திலோ அல்லது ஒட்டுமொத்த இந்தியாவிலோ பெண்களால் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்திலுள்ள எல்லா ஆண்களும் மோசமானவர்களா?
என்று தமக்கே எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இதுபோன்ற குற்றம் செய்து சிக்கியவர் களின் வீட்டின் முன்னால் அவர்களது முகத்தைச் சுவரொட்டியில் அச்சடித்து ஒட்ட வேண்டும். நம் ஊரில் எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை. நடந்துள்ள சம்பவத்துக்கு ஆடையோ, வயதோ, சிறுமியின் நடத்தையோ காரணமில்லை. அச்சிறுமிக்கு இருக்கும் குறையைக் கூடப் பொருட்படுத்தாமல் அதையே சாதகமாகப் பயன்படுத்திச் சீரழித்துள்ளனர்.
சிறுமிகளையும் மாற்றுத் திறனாளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் கேடுகெட்ட கலாச்சாரம்தான் நம்முடைய தமிழ்க் கலாச் சாரம் என்றால் நான் தமிழச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படுகி றேன். அவமானப்படுகிறேன்," என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

