விமல் நடிப்பில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படம் உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். விமல் வெட்க சுபாவம் உடையவர். காதல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டமாட்டார். ஆனால் ஒரு காதல் காட்சியில் புகுந்து விளையாடவேண்டும் என்று இயக்குநர் கேட்டிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் விமல். ஆஷ்னா சவேரியும் தூக்கலான கவர்ச்சி காட்சியில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். அதன் வெளிப்பாடு காதல் பாடல் காட்சியில் கட்டிப்பிடிக்கும் காட்சியில் விமல், ஆஷ்னா போதும் போதும் என்கிற அளவுக்கு நெருக்கமாக கட்டியணைத்து நடித்தாராம். இந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்கவில்லையாம். படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.முகேஷ் கூறும்போது, "கவர்ச்சி, நகைச்சுவைக் கலந்த பொழுதுபோக்குக் கதையாக உருவாகிறது," என்றார்.
ஆஷ்னாவை ஆவேசமாக அணைத்த விமல்
1 mins read
-

