அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் பேய் படத்தின் பெயர் 'லிசா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். இப்படத்தின் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் சென்னையில் படமாக்கப்பட்டன. கதையின் படி, பேய் வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, தோசைக் கல்லை புகைப்படக் கருவி முன்பு வீசவேண்டும்.
வழக்கம்போல் இயக்குநர் படப்பிடிப்பு தொடங்கியதும் அஞ்சலி தோசைக் கல்லைத் தூக்கி வீசியுள்ளார். ஆனால் அந்தத் தோசைக்கல் புகைப்படக் கருவிவையும் தாண்டிச் சென்று இயக்குநர் நெற்றியைப் பதம் பார்த்துள்ளது. இதில் நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குச் சென்ற இயக்குனருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது. தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் அஞ்சலி. அதற்கு இயக்குநர் "எதிர்பாராமல் நடந்தது. இதற்கு ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்," என்று பெருந்தன்மையுடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

