மதுரையில் பாடல் வெளியீட்டு விழா

மதுரையில் பாடல் வெளியீட்டு விழா

1 mins read
7e0afd91-ecd9-4a5c-807f-dcd1c2cce651
-

'சீமராஜா' படத்தின் பாடல் வெளி யீட்டு விழாவை மதுரையில் நடத்த உள்ளனர். ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. தமிழ்த் திரையுலகின் இதயத் துடிப்பாக விளங்கும் நகரம் என்றால் அது மதுரைதான் என்றும், அதன் காரணமாகவே பாடல் வெளியீட்டு விழாவை அங்கு நடத்த முடிவு செய்திருப்ப தாகவும் சொல்கிறார் தயாரிப் பாளர் ஆர்.டி.ராஜா. "இந்தப் படத்தின் மையக் கதை தமிழகத்தின் தெற்குப் பகுதி கிராமப்புறங்களை அடிப் படையாகக் கொண்டது. எனவே மதுரையில் விழாவை நடத்துவது பொருத்தமாக இருக்கும். இந்த நிகழ்வில் ரசிகர்களும் பொது மக்களும் பெரும் எண்ணிக்கை யில் கலந்துகொண்டு இதை வெற்றி விழாவாக மாற்ற வேண் டும்," என்று ஆர்.டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே 'சீமராஜா'வில் இடம்பெறும் 'வாரேன் வாரேன் சீமராஜா...' என்ற ஒற்றைப் பாடலை வரும் 25ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கிராமப் பின்னணியில் நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக உருவாகி வருகிறதாம் 'சீமராஜா'. இதில் சிவ கார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிம்ரன் வில்லியாகவும், சிவகார்த்தி கேயனின் தந்தையாக நெப் போலியனும் நடித்துள்ளனர். மேலும் சூரி, யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.