'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் அப்படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். இதில் கவினும், ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்துள் ளனர். எதிர்வரும் 27ஆம் தேதி இப்படம் திரைகாண இருந்தது. இந்நிலையில் திரைப்பட விநியோகிப்பாளர் மலேசியா பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையைப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து தாம் பெற்றதாகவும் இதற்காகப் பல கட்டங்களாக ரூ.25.20 லட்சம் தந்ததாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார். "ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே எனக்குரிய பணத்தைத் தராமல் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும்,'' என பாண்டியன் தமது மனுவில் கோரியுள்ளார். இதையடுத்து, இப்படத்தை எதிர்வரும் 30ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை வெளியிடத் தடை
1 mins read
-

