ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. புதுமுக இயக்குநர் இளன் இப்படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முன்னோட்டத்தைக் கடந்த 21ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். முன்னோட்டம் வெளியான அடுத்த பன்னிரண்டு மணி நேரத்துக்குள் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இணையம் வழி கண்டு ரசித்துள்ளனர். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கு இணையாக இதற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
12 மணி நேரத்தில் பத்து லட்சம் பேர் பார்த்து ரசித்த முன்னோட்டம்
1 mins read
-

