எம்ஜிஆர் படத்தில் நடிக்கும் சாயிஷா

1 mins read
52846318-8fee-441e-a98e-88a44bedf1fe
-

காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரின் படத்தில் நடிக்க இளம் நாயகி சாயிஷா ஒப்பந்தமாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய வேண்டாம். விவரம் இது தான். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்ற படத்தைத் தயாரிக்க எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். சில காரணங்களால் இப்படத்தை எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், இந்தப் படத்தை கணினி தொழில்நுட்பத்தின் உதவியோடு அனிமேஷன் படைப்பாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நாயகன், நாயகியாக நடிக்க, அவர்களுடன் இரண்டாவது நாயகியாக சாயிஷா நடிக்க உள்ளாராம். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அவரது உருவத்தை கிராஃபிக்ஸ் செய்து படத்தில் பயன்படுத்த உள்ளனர்.