விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்துள்ள 'ராட்சசன்' படம் வெளியீடு காணத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்தியில் அறிமுகமாக உள்ளார் அமலா. அர்ஜுன் ராம்பால் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்க உள்ளது. இந்நிலையில், தாம் எதிர்பார்த்த வாய்ப்பு அமைந்திருப்பதாக கூறியுள் ளார் அமலாபால். "இந்தியில் அறிமுகமாக பல் வேறு வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் நல்ல ஒரு கதாபாத்திரத்துக் காகவே இதுநாள் வரை காத்து இருந்தேன். "நான் நடித்த தமிழ்ப் படங்களைப் பார்த்து தனது கதைக்குப் பொருத் தமாக இருப்பேன் என்று முடிவு செய்து இயக்குநர் நரேன் என்னை அணுகினார். கதையும் கதாபாத்திரமும் பிடித்ததால் ஒப்புக்கொண்டேன்," என்கிறார் அமலாபால்.
இந்தியில் கால்பதிக்கும் அமலா
1 mins read
-

