'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு வசூல் ரீதியிலும், விமர்சன ரீதி யிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் வெற்றி விழாவை யும் சிறப்பாக நடத்தி உள்ளனர். படத்தில் நடித்த, பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் என்ற வகையில் சூர்யாவும் கலந்து கொண்டார். நடிகர் சத்யராஜ் பேசும்போது, படத்தில் நடித்துள்ள அத்தனை பேருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்ததாகக் குறிப்பிட் டார். "எல்லோருக்கும் நடிப்பை நன்றாக வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தது. நான் பட வேலைகள் தொடங்கியபோதே இது வெற்றிப் படைப்பாக உரு வாகும் என்றேன். அது போலவே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. "நாட்டைப் பாதுக்காக்கிறோம் என்று கூறிக் கொண்டு, விவசாய நிலங்களை அழித்து, சொகுசான சாலையில் செல்வதற்காக மரங் களை வெட்டுகின்ற குழுக்களுக்கு இந்தப் படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும்," என்றார் சத்யராஜ்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் லாபத்தில் இருந்து விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி உதவ முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் தமிழக விவசாயி களுக்கு ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தார் நடிகர் சூர்யா.

