குணசேகரன் தயாரிப்பில் உருவாகும் படம் 'வீராபுரம்'. செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. 'அங்காடித்தெரு' புகழ் மகேஷ், 'உறுதிகொள்' புகழ் மேகனா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இது தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் படமாம். உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான காதல் கதையாக அல்லாமல், சமுதாய பிரச்சினை ஒன்றை அலசுகிறார் இயக்குநர். மணல் கொள்ளையால் நிகழ்ந்த உருக்கமான சம்பவத்தை மக்கள் மனதைத் தொடும் வகையில் திரைக்கதையாக அமைத்துள்ளனர். "இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபத்திரத்தை ஏற்றுள்ளார் மகேஷ். இதற்குப் பிறகு சிறந்த அதிரடி நாயகனாக வலம் வருவார்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் செந்தில்குமார்.
அதிரடி, உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் உருவாகும் 'வீராபுரம்'
1 mins read
-

