பூனம்: அவமானப்பட வேண்டியுள்ளது

பூனம்: அவமானப்பட வேண்டியுள்ளது

1 mins read
18c92caf-a2ed-461c-af95-ac50f5b21ee6
-

திரையுலகில் பாலியல் தொல்லை நிலவுவதாக பல நடிகைகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் பூனம்கவுர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியைத் தொடர்ந்து, இவரும் தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கூறியுள்ளார். அவரது பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அத்தயாரிப்பாளர் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் என சுட்டிக்காட்டி உள்ளார். "அந்தத் தயாரிப்பாளர் நான் நடித்துள்ள படங்களை வெகுவாகப் பாராட்டினார். பிறகு முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். "இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் வந்ததை அவர் விரும்பவில்லை," என்கிறார் பூனம். அத்தயாரிப்பாளர் தம்மிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், நடிகைகள் பல்வேறு அவமானங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என வருத்தப்படுகிறார்.