குழந்தைகளைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் நடிகை வரலட்சுமி. அண்மையில் படப்பிடிப்புக்காக கிராமப்புறப் பகுதிக்குச் சென்றிருந்தாராம். அங்குள்ள சில குழந்தைகள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதைக் கவனித்தவர் அவர்களில் சிலரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். அப்போது அச்சிறுவர் சிறுமியர் தினமும் 7 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கூடம் சென்று வருவதை அறிந்து ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தாராம். உடனடியாக மறுநாளே அக்குழந்தைகளில் சிலரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். "அந்தக் குழந்தைகளின் முகத்தைப பார்க்க வேண்டுமே... அப்படி ஓர் உற்சாகம். அதைக் கண்டபோது என் மனம் நிறைந்து போனது. "கல்விக்காக தினமும் இந்தளவு மெனக்கெடும் இந்தச் சிறுமிகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி.
மாணவிகளைப் பாராட்டிய வரலட்சுமி கல்வியில் கவனம் செலுத்தும்
1 mins read
-

