அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளிவந்தது 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்தப் படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகக் கூறி வந்த அமலாபால் தற்பொழுது இந்தியில் நடிக்க தனக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அமலாபாலின் நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக 'தெய்வத்திருமகள்', 'வேட்டை', 'தலைவா', 'நிமிர்ந்து நில்', 'வேலையில்லா பட்டதாரி', 'திருட்டுப்பயலே=2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் இருந்தன. தற்பொழுது 'ராட்சசன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இயக்குநர் நரேஷ் அண்மையில் அமலாபாலை அணுகி இந்தி படத்தில் நடிக்க கதை சொல்லி இருக்கிறார். அந்தக் கதை அமலாபாலுக்குப் பிடித்துப் போனதால் படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார். இதில் கதாநாயகனாக அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார். இவர் இந்தி பட உலகில் பிரபல நடிகராக இருக்கிறார்.

