இனியாவின் இசைத்தொகுப்பு

இனியாவின் இசைத்தொகுப்பு

2 mins read
afab11e5-afaf-458d-aa8d-4952ebc38ffa
-

தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இசைத்தொகுப்புகளை வெளியிடுவது, குறும்படங்கள் தயாரிப் பது எனப் பல்வேறு விஷயங்களில் கவ னம் செலுத்தி வருகிறார்கள் இளம் நாயகிகள். அந்த வகையில் இசைத் தொகுப்பு ஒன்றைத் தயாரித்துள்ளார் நடிகை இனியா.

தனக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு என்று குறிப்பிடுபவர் தற்போது 'மியா' என்ற காணொளி இசைத்தொகுப்பைத் தயாரித்துள்ளாராம். நடனத்தில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் ஓர் இளம் பெண் அதற்காக கடுமையாக உழைக்கி றாள். உலகளவில் நல்ல நடனக் கலை ஞர் எனப் பெயரெடுப்பதே மியாவின் லட்சியம்.

அதைச் சாதிக்க முற்படும் அவ ளுக்கு ஏராளமான தடைகள் முளைக்கின்றன. அனைத்தையும் கடந்து அவள் எப்படி சாதிக்கி றாள்? என்பதுதான் இசைத் தொகுப்பு சொல்லும் சேதி. "இந்த இசைத்தொகுப் பின் மூலமாக வசூல் ஆகும் பணத்தைக் கொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம். இதேபோல் மேலும் பல திட்டங் கள் உள்ளன. இந்த உலகத்தில் உள்ள அனைத்து நடனக் கலைஞர்க ளுக்கும் 'மியா'வைக் காணிக்கையாக் குகிறோம்," என்கிறார் இனியா.

'வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா?' என்று தொடங்கும் இந்த இசைத் தொகுப்பில் வசனங்களும் உள்ளனவாம். வழக்கமான சாதாரண இசைத்தொகுப்புகள்போல் அல்லாமல் இதில் நவீன சினிமா யுக்திகளை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர்.

சந்தேகமே வேண்டாம். மியாவாக நடித்திருப்பது இனியாதான். இவரும் பரத்தும் இணைந்து நடித்துள்ள 'பொட்டு' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.