'வில்லத்தனம் பிடிக்காது'

'வில்லத்தனம் பிடிக்காது'

2 mins read
9cb0d4d8-bcdb-4a51-9d01-c51b1a63b46b
-

'தமிழ்ப் படம் 2' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார் இளம் நாயகி ஐஸ்வர்யா மேனன். 'ஆப்பிள் பெண்ணே', 'வீரா' உள்ளிட்ட படங்க ளில் ஏற்கெனவே தலைகாட்டி இருந்தாலும் இப்போது தான் ரசிகர்கள் தன்னைக் கவனிக்கத் தொடங்கி இருப்பதாக உற்சாகத்துடன் சொல்கிறார் ஐஸ்வர்யா. தற்போது தமிழில் மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். அதற்காக எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல், மனதுக்குப் பிடித்தமான, நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம்.

ஐஸ்வர்யா நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் மூன்று தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஏன் இந்த இடைவெளி?

"நானா நடிக்க மாட்டேன் எனச் சொல்கிறேன்?

தமிழ்ப் படங்களில் நடிப்பது என்பது கரும்பு தின்ன கூலி மாதிரி. யாராவது மறுப்பார்களா?

"அதேசமயம் கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அவற்றையும் நழுவ விடக் கூடாது என்கிற கட்டாயம் உள்ளது. எனவேதான், இதுவரை தமிழில் அதிக படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. இனி தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவேன்," என்கிறார். அண்மையில் இந்திப் பட வாய்ப்பு ஒன்றும் தேடி வந்ததாம். ஆனால், இந்தியில் நடிக்கத் துவங்கினால் பிற மொழிகளில் நடிப்பது குறைந்துவிடும் என்பதால் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.

"பொதுவாக நான் மொழி வித்தியாசம் பார்ப்பது இல்லை. எனவே எல்லா மொழிகளிலும் நடிக்கிறேன். மொழிதான் வேறுபடுகிறதே தவிர, நடிப்பு என்பது எல்லா இடங்களிலும் ஒன்றுதான். தமிழ், மலையாளம் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடமும்கூட திராவிட மொழிகள்தானே. எனவே அனைத்து மொழிகளிலும் எனக்கு ஏற்ற கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

என்ன மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்?

"ஏதோ நூறு படம் நடித்து முடித்ததுபோல் கேட்கிறீர்கள். நான் இப்போதுதான் நடிக்கவே வந்தி ருக்கிறேன். இன்ன மாதிரியான பாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று சொல்லும் ஐஸ்வர்யா மேனனுக்கு வில்லத்தனம் செய்வது மட்டும் பிடிக்காதாம். அதனால் வில்லியாக நடிக்க மாட்டேன் என்கிறார். அதேசமயம் எதிர்மறை குணாதிசயம் கொண்ட நாயகியாக நடிப்பதில் தயக்கமில்லையாம். திரை யுலகில் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் உடனடி யாகக் கிடைக்காது என்பதை உணர்ந்து வைத்துள் ளார். தமிழில் குடும்பப் பாங்காக நடிப்பவர் தெலுங்கில் மட்டும் கவர்ச்சி காட்டுவது ஏன்? என்று சிலர் கேட்கிறார்களாம்.

"என்னைப் பொறுத்தவரை வலுக்கட்டாயமாக கவர்ச்சி காட்டுவது பிடிக்காது. அதிகப்படியாக கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கு அளிக்கப்படும் ஆடைகள் சவு கரியமாக இருந்தால் அணிவேன். "நான் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு அவசியம் எனில் நீச்சல் உடையிலும் நடிப்பேன். மற்றபடி ஒரு மொழியில் கவர்ச்சி காட்டுவது, இன்னொரு மொழியில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பது என்றெல்லாம் பாகுபாடு காட்டமாட்டேன்," என்கிறார் ஐஸ்வர்யா.