காதல் காவியமாக உருவாகும் புதுப்படம்

காதல் காவியமாக உருவாகும் புதுப்படம்

1 mins read
4ad95be6-3c1a-4004-8e71-fe0bba791a0e
-

புதுமுகங்கள் யோகி, வர்‌ஷிதா அறிமுகமாகும் படம் 'பார்த்திபன் காதல்'. வள்ளிமுத்து இயக்கு கிறார். இவர் 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டியிடம் உதவி இயக்குநராகப் பணி யாற்றியவர். "இது உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம். கதைக்களம் காதலாக இருந்தாலும் திரைக்கதை புதி தாக இருக்கும். "யோகிக்கு ஓவியக் கல்லூரி மாணவர் வேடம். வர்‌ஷிதா கிரா மத்து கல்லூரி மாணவியாக திரையில் தோன்றுவார். "என்னதான் அடிதடி, திகில், நகைச்சுவைப் படங்கள் வந்தா லும் காதல் கதைகளுக்கு மட் டும் என்றுமே ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கும். காதலுக்கு எப்படி அழிவு இல்லையோ அதே போல்தான் காதல் படங்களும். "இன்றைக்கும் காலம் கடந்து நிற்கும் படங்கள் எல்லாம் காதல் படங்கள்தான். சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டுவிக்கும் பேய்க் கதைகளில் இருந்து அதை மீட்டெடுக்கும் விதமாக 'பார்த்திபன் காதல்' முழுமையான காதல் காவியமாக உருவாகி வருகிறது,'' என்கிறார் வள்ளி முத்து.

இப்படத்துக்கு தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்ய, பில்லா இசையமைத்துள்ளார்.