கலகலப்பான 'கன்னிராசி'

கலகலப்பான 'கன்னிராசி'

1 mins read
7a27f75d-c8b4-4399-bc9f-8d63d6ec4867
-

எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் உரு வாகி வருகிறது 'கன்னி ராசி'. கூட்டுக் குடும்பப் பின்னணியில் கலகலப்பான படைப்பாக உருவாகிறது. இருபதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங் களைக் களம் இறக்கியுள்ளார் இயக்கு நர். பல ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் படம் இயக்கிய பாண்டியராஜனும் இவர்களில் ஒருவராம்.

'கன்னி ராசி' என்று தலைப்பு வைப்ப தாக முடிவு செய்தவுடன் பாண்டியராஜ னைத் தேடிச் சென்றதாகச் சொல்கிறார் முத்துக்குமரன். ஆனால், அத்தலைப்பின் உரிமையோ தயாரிப்பாளரிடம் இருந்துள் ளது. இதையடுத்து பாண்டியராஜனே பேச்சு வார்த்தை நடத்தி இந்தத் தலைப்பை வாங்கிக்கொடுத்தாராம். விமல், வரலட்சுமி இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். கதைப் படி விமல் குடும்பத்தில் உள்ள அத்தனை பேருமே ஜோதிடப்படி கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள். வீட்டில் உள்ள அனைவருக் குமே காதல் திருமணம்தான் நடக்கிறது. ஆனால் வீட்டுப் பெரிய வர்கள் பேசி நடத்தும் திருமணமே சிறந்தது என்பது விமலின் எண்ணம். அதனால் காதலே தேவையில்லை என்று நினைப்பாராம்.

இத்தகைய சூழ்நிலையில் காதல் என்றால் அறவே பிடிக்காத வரலட்சுமி, விமல் வீட்டுக்கு எதிரே குடி வருகிறார். அதன்பிறகு இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் கலகலப்பாக இருக்கும். இதில் திரையரங்க உரிமை யாளராக விமலும் பள்ளி ஆசிரியையாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். பாண்டியராஜன், யோகிபாபு உள்ளிட் டோர் நகைச்சுவைக்குப் பொறுப்பேற் றுள்ளனர். ஷகிலா, ரோபோ சங்கர், காளி வெங்கட், சாம்ஸ் என மேலும் பலர் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர்.