இந்தியில் வெற்றி பெற்ற 'குயின்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிரம்மாண்டமாக மறுபதிப்பு செய்யப்படுகிறது. மீடியன்ட் நிறுவனம் சார்பாக மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழில் 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் 'தட்ஸ் மஹாலட்சுமி', கன்னடத்தில் 'பட்டர்ப்ளை', மலையாளத்தில் 'ஜாம் ஜாம்' என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பாவில் நடைபெற்ற இப்படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்றது.
'பாரிஸ் பாரிஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது
1 mins read
-

