'ஜுங்கா' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி. இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இதற்கு 'சேதுபதி-2' என்று பெயர் வைக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் 'திருடாதே' அல்லது 'மலைக்கள்ளன்' ஆகிய இரு தலைப்புகளைப் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்களாம். இரண்டுமே எம்ஜிஆர் நடித்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகள். இந்தப் புதுப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் சேது பதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது 'சீதக்காதி', 'சைரா நரசிம்ம ரெட்டி', 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.
மீண்டும் போலிஸ் வேடத்தில் சேதுபதி
1 mins read
-

