பெண்கள் என்றால் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்கிறார் பிரியா ஆனந்த். திருமணம் குறித்துப் பெண்கள் சுயமாக முடிவெடுப்பதே நல்லது என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "நம் பாட்டி காலத்தில் தான் பெண்கள் என்றால் கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. திருமணம் செய்யாமலேயே பல பெண்கள் வாழ்கி றார்கள். "என்ன படிக்க வேண்டும்? எந்த மாதிரியான வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை எல்லாம் சரியாக முடிவு செய்யும் பெண்களுக்கு எப்படிப்பட்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற பக்குவமும் உள்ளது. "பொருத்தமான ஒருவர் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் தனியாக இருப்பதே நல்லது," என்கிறார் பிரியா ஆனந்த். தற்போது மலையாளத்தில் 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்திலும், தமிழில் 'எல்கேஜி' படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியா ஆனந்த்.
"பொருத்தமானவர் கிடைக்க வேண்டும்"
1 mins read
-

