ஆளில்லா தீவில் சிக்கித் தவித்த 'பூமராங்' படக்குழுவினர்

ஆளில்லா தீவில் சிக்கித் தவித்த 'பூமராங்' படக்குழுவினர்

2 mins read
972e01b3-81c7-4fad-a09f-b9a1590b3c02
-

கொட்டும் மழையில் ஆள் இல்லாத தீவு ஒன்றில் சிக்கிக் கொண்ட அனு பவத்தைப் பெற்றுள்ளனர் 'பூமராங்' படக்குழுவினர். அண்மையில் ஒரு பாடல் காட் சியைப் படமாக்க அந்தமான் அருகே உள்ள ஹாவ்லாக் எனும் தீவுப் பகுதிக்குச் சென்றிருந்தனராம். அப் போது வானிலை மோசமாக இருந்திருக்கிறது. "படப்பிடிப்பு தொடங்கும்போதே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹாவ்லாக் தீவுக்கு அந்தமானின் போர்ட் பிளேர் பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் படகு இயக்கப்படும். எனவே அந்தப் படகுக்காரரிடம் முன்கூட்டியே பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்தி ருந்தோம்.

"ஹாவ்லாக் தீவில் காலை 5 மணிக்கெல்லாம் சூரியன் உதித்து விடும். அதனால் பாடல்களை விரைவில் படமாக்கிவிடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் ஹாவ்லாக் தீவுக்கு சென்றதும் மழை கொட்டித் தீர்த்தது. அப்படி ஒரு பேய் மழையை இதுவரை நான் கண்டது இல்லை. "சூறைக்காற்று வீசியதில் நிலை குலைந்து போனோம். அனைவரும் தங்குவதற்காக போடப்பட்ட டெண்ட் கொட்டகையும் காற்றில் பறந்து போனது.

கொட்டும் மழையில் நான், அதர்வா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பல மணி நேரம் தவித்தோம். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கூட மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். "மறுநாள் மழை நின்றாலும் படப் பிடிப்பை சுலபமாக நடத்த முடிய வில்லை. சேறும் சகதியுமாக இருந்த வனப்பகுதியில் நடனமாட அதர்வாவும் மேகா ஆகா‌ஷும் சிரமப்பட்டனர். எனினும் நடன இயக்குநர் பிருந்தா மிக சாதுரியமாக நடன அசைவுகளை அமைத்துக் கைகொடுத்தார். "இந்தப் படத்தையும் ஹாவ்லாக் தீவு கொடுத்த அனுபவத்தையும் வாழ் நாள் முழுவதும் மறக்க இயலாது," என்கிறார் இயக்குநர் கண்ணன்.

'பூமராங்' படத்தின் ஒரு காட்சியில் அதர்வா, மேகா, ஆர்.ஜே. பாலாஜி