மரண நடனம் ஆடினால் போலிசார் நடவடிக்கை

மரண நடனம் ஆடினால் போலிசார் நடவடிக்கை

2 mins read
c995d5f1-3c53-47ec-a491-8d5646990752
-

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளைக் கலக்கிய கிகி சவால் நடன விளையாட்டு இப்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது. ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை இந்த கிகி சவாலை ஏற்று காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவரும் நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ரெஜினா கசாண்ட்ராவும் இந்தச் சவாலை தானும் நிறைவேற்றி இருப்பதாக இப்போது காணொளியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஓடும் காரில் இருந்து குதிக்கும் அவர், கிகி பாடலுக்கு நடனமாடி, காணொளியாக எடுத்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற விபரீத நடனத்தால் விபத்துகள் ஏற்பட்டு, ஒரு சிலர் பலத்த காயம் அடைந்துள்ள னர். எனவே இந்த மரண நடனத்தை ஆடவேண்டாம் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையையும் மீறி நடனமாடினால் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, சவால் விடுவது போன்ற இந்த கிகி நடனத்துக்கு தன்னுடைய ரசிகர்களையும் நடன மாடத் தூண்டிவிடுவதுபோல் காணொளி வெளி யிட்டுள்ள ரெஜினா மீதும் இந்தி நடிகைகள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த பிரபல பாடகர் டிரேக் வெளியிட்ட 'ஸ்கார்பியன்' என்ற இசைத் தொகுப் பில் இடம்பெற்ற கிகி பாடல் இளைஞர்கள் மத்தி யில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஷாகி என்ற நகைச்சுவை நடிகர் நடனமாடி அந்த காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதனை உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் சவாலாக ஏற்று ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்தக் காணொளிகளைப் பதிவிட்டனர். ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகள் இந்தப் பாடலுக்கு நடனமாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து, இந்தி நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடி காணொளியைப் பதிவிட்ட நிலையில் நேற்று முன்தினம் ரெஜினாவும் காணொளியைப் பகிர்ந்துகொண்டார்.

ஓடும் காரிலிருந்து இறங்கும் வேகத்தில் சாலையில் நடனமாடி மீண்டும் அந்தக் காருக்குள் ஏறி அமர்ந்து விடுவதுதான் இந்தச் சவால். இக்காட்சி இணையத் தளத்தில் வேகமாகப் பரவியது. அவரைப் போல பல பாலிவுட் நடிகைகளும் ஆடிய காணொளி காட்சிகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.