'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன'

1 mins read
70d12e6b-c513-4eff-8b09-8d4be115007e
-

வி.மதியழகன், ரம்யா தயாரித்துள்ள படம் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன'. மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ளார். 'திலகர்' துருவா நாயகனாக நடிக்க, பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கி உள்ளனர். அச்சு இசையமைத்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களை மையப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் ராகேஷ். "இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை சான்றிதழ் கொடுக்க மறுத்தது. இத்தகவல் ஊடகங்கள் மூலமாக செய்தியாக வெளியான பிறகுதான் இப்படி ஒரு படம் உருவாகி இருப்பதே வெளியே தெரியவந்தது. அந்த வகையில் மகிழ்ச்சி தான்," என்கிறார் நாயகன் துருவா.