சேதுபதி: சிவாவுடன் போட்டி இல்லை

1 mins read
4367e797-12e0-4d40-af1e-cb533a708115
-

சிவகார்த்திகேயனுடன் தமக்கு எந்தவிதமான போட்டியும் இல்லை என்கிறார் விஜய் சேதுபதி. இதுவரை சிவாவுடன் நெருங்கிப் பழகியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு ஆகிய இணைகளின் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என்ற இணை உருவாகி இருக்கிறதே? என்று சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"சிவாவும் நானும் வெளியில் எங்கேயாவது சந்தித்தால் நன்றாகப் பேசுவோம். அன்பைப் பரிமாறிக் கொள்வோம். அவரது படங்கள் பெரியளவில் வியாபாரம் ஆகிறது. என்னைவிட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். "எல்லா முன்னணி நடிகர்களையும் இதுபோன்று இணையாகப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்போதும் ஓர் இணை தேவைப்படுகிறது. அதனால் உருவானதுதான் நீங்கள் குறிப்பிடும் இணை. இது நாங்கள் உருவாக்கியது அல்ல," என்றார் விஜய் சேதுபதி.