புதுக்கூட்டணி அமைக்கும் நரேன், சிம்பு

புதுக்கூட்டணி அமைக்கும் நரேன், சிம்பு

1 mins read
78eb519e-07f7-431f-8fe5-59c236578103
-

'நரகாசூரன்' படத்தை முடித்த கையோடு அடுத்த படைப்பில் கவனம் செலுத்தத் துவங்கி விட்டார் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் 'துருவங்கள் 16' மூலம் தமிழ் ரசிகர் களின் கவனத்தை ஈர்த்தவர். இந்நிலையில் இவரது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவுடன் பேசி வருவதாக கார்த்திக் நரேனும் கூறியுள்ளார். இருவரும் அண்மையில் சந்தித்துப் பேசியபோது நிறைய கருத்துக்களை, யோசனைகளைப் பரிமாறிக் கொண்டனராம். தாம் இயக்குவதற்காகத் தேர்வு செய்து வைத்துள்ள சில கதைகளைக் கார்த்திக் நரேனிடம் சிம்பு விவரித்தாராம். பதிலுக்கு நரேனும் தன் கைவசம் உள்ள சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அடுத்தக்கட்ட சந்திப்பு, பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.