பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சி னைகளை அலசும் படமாக உருவாகி உள்ளது 'கொம்பு'. இதில் நாயகியாக நடித்துள்ளார் திஷா பாண்டே. இவர் 'தமிழ்ப் படம்' முதல் பாகத்தில் நடித்தவர். "பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி தருகிறது. பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் அவற்றுக்குரிய தீர்வுகள் குறித்தும் பேசும் படமாக உருவாகி இருப்பதில் கூடுதல் மன நிறைவு," என்கிறார் திஷா. இப்படத்தில் நகைச்சுவை, திகில் என இதர அம்சங்களும் உள்ளனவாம். பட நாயகன் ஜீவா தமக்கு நல்ல பல ஆலோசனைகளை அளித்து உதவிய தாகவும் குறிப்பிடுகிறார் திஷா.
திஷா பாண்டே மனநிறைவுடன் நடித்துள்ள தமிழ்ப் படம்
1 mins read
-

